கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் என்.குணசேகரன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பட்டாசு வெடித்து ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 10 சிறப்பு படுக்கைகள் தயார்படுத்தப் பட்டுள்ளது. மேலும் அந்த வார்டில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பார்கள். இந்த சிறப்பு வார்டு இன்று (சனிக்கிழமை) முதல் 10 நாட்களுக்கு செயல்படும்.
கடந்த ஆண்டும் இதேபோல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு தீபாவளியின்போது பட்டாசு வெடித்ததில் 50 பேர் தீக்காயங்களுடன் வந்தனர். அதில் 40 பேருக்கு புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டது. 10 பேர் பலத்த காயத்துடன் வந்ததால் அவர்கள் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.