அட்சய திருதியையை முன்னிட்டு நகைக் கடைகளில் நேற்று மாலையில் இருந்து கூட்டம் அலை மோதியது. இக்கூட்டம் இன்று மேலும் அதிகரிக்கும் என நகை வியாபாரிகள் கூறினர்.
திருதியை திதி நேற்று, இன்று ஆகிய 2 நாட்களும் இருப்பதால் நகை விற்பனைக்காக அனைத்து நகைக்கடைகளும் இந்த 2 நாட் களும் சிறப்பு விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளன.
வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக, சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், அடையாறு, மயி லாப்பூர், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் முக்கிய நகைக் கடைகள் மலர் களால் அலங்காரம் செய்யப்பட் டுள்ளன. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளையும் அறிவித்து விளம்பரம் செய்திருந்தனர்.
நகைக் கடைகளில் நேற்று மாலைக்கு பிறகு, வழக்கத்தைவிட அதிக மக்கள் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது. முக்கியமாக, இன்றுதான் அட்சய திருதியை கொண்டாடப்படுவதால், நேற்றைய தினத்தைவிட, இன்று மக்கள் கூட்டமும், நகை விற்பனையும் அதிகம் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.