வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை முழுமையாக ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நேற்று உண் ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங் களை ரத்து செய்யக்கோரி தமிழக வழக்கறிஞர்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் நடந்த கூட்டுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கறிஞர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற் கொண்டனர். இந்த உண்ணா விரதப் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் துணைத் தலைவர் கினி இமானு வேல் தலைமை வகித்தார். வழக் கறிஞர்கள் இரா.சிவசங்கர், சீனி வாசராவ், மில்டன், பார்வேந்தன், மார்க்ஸ் ரவீந்திரன், தாரா, பாரதி உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாலையில் இந்த உண்ணாவிரதத்தை மூத்த வழக்கறிஞர் என்ஜிஆர்.பிரசாத் முடித்து வைத்தார்.
அப்போது வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘மதுரையில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த உண்ணாவிரதம் நாளையும் (இன்று) தொடரும். அத்துடன் 168 தமிழக வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து இந்திய பார் கவுன்சில் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும்’’ என்றனர்.
முன்னதாக வழக்கறிஞர்களின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக சமூக ஆர்வலர் டிரா பிக் ராமசாமி நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பாக ஒரு முறையீடு செய்தார்.
அதில், ‘‘வழக்கறிஞர்கள் எந்த வொரு முன்அனுமதியும் பெறாமல் நடைபாதையில் உண்ணா விரதம் இருந்து வருகின்றனர்’’ என்றார்.
அதற்கு தலைமை நீதிபதி, ‘‘வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் உண்ணாவிரதம் இருக்கவில்லை’’ எனக்கூறி தலை மைப் பதிவாளரை வரவழைத்து நீதிமன்றம் இது தொடர்பாக ஏற் கனவே பிறப்பித்த உத்தரவுகளை சரியாக பின்பற்றுமாறு அறிவுறுத் தினார்.