தமிழகம்

திருச்சியில் சாலை விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

செய்திப்பிரிவு

திருச்சியில் காரும் - லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார்.

விபத்து குறித்து காவல்துறையினர் கூறியதாவது, "திருச்சியில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் 3 பெண்கள் பலியாகினர், ஒருவர் காயமடைந்தார்.

சாலையின் குறுக்கே பாய்ந்த குரங்கின் மீது காரை ஏற்றுவதை தவிர்க்க கார் டிரைவர் காரை சற்று திருப்பியுள்ளார்.

அப்போது லாரி மீது கார் பலமாக மோதியது. இதில், காரில் இருந்த 3 பெண்கள் பலியாகினர். ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்றனர்

SCROLL FOR NEXT