தமிழகம்

‘தி இந்து’ அறைகூவலை ஏற்று பொள்ளாச்சியில் ‘புத்தகங்களுடன் புத்தாண்டு’விழா

செய்திப்பிரிவு

மாணவர்கள் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில், பொள்ளாச்சியில் புத்தகங்களுடன் புத்தாண்டு’ விழா கொண்டாடப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பதிப்புத் துறையின் மீட்சிக் காக, இந்த ஆண்டு புத்தாண்டை புத்தகங்களுடன் கொண்டாடுவோம் என்ற ‘தி இந்து’வின் அறைகூவலை ஏற்று, மாநிலத்தின் பல்வேறு இடங்களில், பொது மக்கள் புத்தாண்டை புத்தகங் களுடன் வரவேற்றனர்.

அதன்படி, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே 100-க் கும் மேற்பட்டோர், புத்தாண்டு தினத்தில் 600-க்கும் அதிகமான புத்தகங்களை பொதுமக்களுக்கு வழங்கி, புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.

பொதுமக்கள் கூறும்போது, “வழக்கமாக இனிப்புகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வோம். நாவில் இனிப்பின் சுவை உள்ளவரை, இனிப்பு வழங்கி யவரின் நினைவு இருக்கும். ஆனால், இந்த முறை புத்தகங் களை வழங்கியுள்ளனர். இதில் உள்ள நல்ல கருத்துகள், வாழ் வில் ஏதேனும் ஒரு நாளில் பய னுள்ளதாக அமையும்போது, அந்தப் புத்தகத்தை வழங்கியவர் நினைவில் வருவார். வாழ்வு முழுவதும் நல்ல நண்பனாக இருக்கக் கூடியது புத்தகங்கள் மட்டுமே. எனவே, இந்த புத்தாண்டுக்கு நல்ல நண்பனை பரிசாகப் பெற்றுள்ளோம்” என்றனர்.

          
SCROLL FOR NEXT