சேலம் மாவட்டம் வாழப்பாடி யைச் சேர்ந்தவர் டி.சிவராமச்சந் திரன் (28). இவர் கோவை போத்தனூரில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படையில் காவல ராக பணியாற்றி வருகிறார்.
இவர், நேற்று பழனியிலிருந்து கோவை மாவட்டம் ஆனைக் கட்டி செல்லும் அரசுப் பேருந் தில் பயணம் செய்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.பாண் டியராஜன்(30) நடத்துநராக இருந்தார். உக்கடம் வந்ததும், காந்திபுரத்துக்கு 4 கி.மீ இருப்ப தால் மேலும் ரூ.7-க்கு டிக் கெட் எடுக்குமாறு நடத்துநர் தெரிவித்தார். இதில் வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த சிவராமச்சந்திரன், கத்தியால், பாண்டியராஜனை குத்தியுள் ளார். பாண்டியராஜன் உடனடி யாக கோவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
காட்டூர் போலீஸார், சிவராமச் சந்திரனை கைது செய்தனர்.