புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் மகான் அரவிந்தரின் 144-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப் பட்டது.
அரவிந்தர் கடந்த 1872-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி கொல்கத் தாவில் பிறந்தார். விடுதலைப் போராட்டத்தில் தீவிரம் காட்டிய அரவிந்தர், ஆன்மிகத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக, கடந்த 1910-ம் ஆண்டு புதுச் சேரிக்கு வந்து ஆசிரமத்தை நிறுவினார். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் இந்த ஆசிரமத் தின் உறுப்பினர்களாக உள்ளனர்.
அரவிந்தரின் பிறந்த நாள் விழா, ஆசிரமத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. அதுபோல் நேற்று அரவிந்தர் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கொண்டாடப்பட்டது.
சிறப்பு கூட்டுத் தியானம்
இதையொட்டி நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அரவிந்தரின் பக்தர்கள் ஏராளமானோர் புதுச்சேரிக்கு வந்திருந்தனர். அரவிந்தர் ஆசிரமத்தில் அதிகாலை நடை பெற்ற சிறப்பு கூட்டு தியானத்தில் கலந்துகொண்டனர்.
அரவிந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு அரவிந்தர் மற்றும் அன்னை பயன்படுத்திய அறை கள், பொருட்கள் பக்தர்களின் பார்வைக்கு திறந்து வைக்கப் பட்டிருந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இதனை தரிசித்தனர். அரவிந்தர் பிறந்த நாளையெட்டி ‘ஆரோவில்’ சர்வதேச மையத்தில் உள்ள மாத்ரிமந்திர் முன்பு பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர் இணைந்து ‘பான் ஃபயர்' எனப்படும் தீபோற்சவ தியானத்தில் பங்கேற்றனர்.