தமிழகம்

கால்நடை பராமரிப்புத் துறைக்கு நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவு

செய்திப்பிரிவு

கால்நடை பராமரிப்புத் துறையில் ரூ. 25 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டங்களை செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசு செய்தி குறிப்பில் : கிராமப்புற பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகள் நன்கு பராமரிக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருந்தகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 25 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டங்களை செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, உதகமண்டலத்தில் உள்ள உறைவிந்து உற்பத்தி நிலையம் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 6 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், 250 மானிய உலர் தீவன உற்பத்தி நிலயங்களை அமைக்க, ஒரு மையத்திற்கு 5 லட்சம் ரூபாய் வீதம் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், கிராமங்களில் உள்ள 100 கால்நடை கிளை நிலையங்களை நவீன வசதிகளுடன் கூடிய கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்த 6 கோடியே 93லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT