தமிழகம்

தமிழகத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்ப தாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத் துக்கு நிதி திரட்டி கொடுத்ததாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜமீல் முகமது, சென்னை மயிலாப் பூரை சேர்ந்த இக்பால் ஆகி யோரை கடந்த மாதம் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில் சென் னையை சேர்ந்த 6 பேர் அதிக அளவில் நிதி கொடுத்தது தெரிந் தது. அந்த 6 பேரிடமும் தேசிய பாதுகாப்பு முகமை(என்.ஐ.ஏ) அதி காரிகள் விசாரணை நடத்தினர்.

என்.ஐ.ஏ அதிகாரிகளின் தொடர் விசாரணையில், தென் இந்திய மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகியவற்றில் இருந்து ஏராளமானவர்கள் ஐ.எஸ் இயக் கத்துக்கு ஆதரவாக நிதி திரட்டி, அவர்களுக்கு அனுப்பி இருப் பதை கண்டுபிடித்தனர். மேலும், சிலர் ஆயுதங்கள் வாங்குவதற்கு உதவி செய்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், இந்திய உளவுத் துறை அதிகாரிகள் நடத்திய விசா ரணையில், தமிழகம் உட்பட இந் தியாவில் பல இடங்களில் தாக்கு தல் நடத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருக்கும் தகவலும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், உடனடி யாக மாநில அரசுகளை எச்சரித்து உள்ளனர். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனையும் நேற்று முதல் தீவிரமாக்கப்பட்டுள்ளன. போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

          
SCROLL FOR NEXT