தமிழகம்

பாவினி அணுமின் நிலையம் விரைவில் செயல்படும்: 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது

செய்திப்பிரிவு

கல்பாக்கத்தில் பாவினி அணுமின் நிலையம் விரைவில் செயல்பட தொடங்கும் என நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.

கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் அணுசக்தி துறையின் பாதுகாப்பு மற்றும் தொழில் சார்ந்த வல்லுனர்களின் 31-வது ஆண்டு கூட்டம் நேற்று நடந் தது. இதில் அணுமின் நிலை யங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பல்வேறு தலைப்புகளில் 3 நாள் கருத் தரங்கம் நடைபெறும்.

இதன்படி நேற்று தொடங்கிய கருத்தரங்கை அணுசக்திதுறை ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் எஸ்.எஸ்.பஜாஜ் தொடங்கி வைத்தார். மேலும், கடற் கரை அணுசக்தி தளங்களில் பாது காப்பு மற்றும் அவசர நிலை மேலாண்மை, நீரிழிவு நோய் மற்றும் வளர்சிதை நோய் குறித்து பேசினார்.

மேலும், கல்பாக்கம் அணுமின் தளங்களில் சுனாமி மேலாண்மை குறித்து, இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் பல்தேவ்ராஜ் பேசினார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், அணு சக்தி தளங்களின் பல்வேறு பாது காப்பு தலைப்புகளுக்கு, அணுசக்தி துறை நிபுணர்களால் விரிவுரைகள் வழங்கப்பட்டன.

பின்னர் நிருபர்களைச் சந்தித்த பாவினி அணுமின் நிலைய தலைவர் பிரபாத்குமார், ‘புதி தாக அமைக்கப்பட்டு வரும் 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட பாவினி அணுமின் நிலைய கட்டமைப்பு பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது. சோடியம் நிரப்புவதற்காக அணு சக்தி துறை ஒழுங்குமுறை ஆணை யத்தின் அனுமதி கோரப் பட்டுள்ளது. அனுமதி கிடைத்த வுடன், சோதனை முறை செயல் பாடுகள் விரைவில் தொடங்கப் படும்’ என தெரிவித்தார். முன்னதாக, அணுசக்திதுறை ஒழுங்கு முறை ஆணையத்தின் 2013-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது ராஜஸ்தான் அணுமின் நிலையம் 7 மற்றும் 8-க்கு வழங்கப்பட்டது.

மேலும், பொதுமக்கள் மற்றும் அணுசக்தி துறையிடையேயான தொடர்பு மேம்படும் வகையில் அணுசக்தி தொழில்நுட்பம், தொழில்சார்ந்த பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு உபகரணங்கள், பொது மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆகியன தொடர்பான கண்காட்சி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், அணுசக்தி துறை ஒழுங்கு முறை ஆணைய செயலாளர் பட்டாச்சார்யா மற்றும் பாவினி அணுமின் நிலைய இயக்கு நர் டேவிட் மற்றும் நாடு முழுவ தும் உள்ள பல்வேறு அணு மின் நிலைய நிர்வாகிகள், வல்லூநர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT