தமிழகம்

சென்னையில் ஓடும் ஆட்டோக்களில் 4 மாதங்களில் ஜிபிஆர்எஸ் கருவி: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

செய்திப்பிரிவு

முறையான கட்டணம் வசூலிக்கும் வகையில் முதற்கட்டமாக சென்னையில் ஓடும் ஆட்டோக்களில் 4 மாதங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை நுகர்வோர் குரல் நிர்வாகி லோகு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற அவ மதிப்பு வழக்கில், “பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆட்டோவில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க வசதியாக புகார் எண் இருக்க வேண்டும்.

ஆட்டோவில் கட்டண விவரப் பட்டியல் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 நிபந் தனைகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. ஆனால் இந்த நிபந்தனைகள் எதையும் அரசு நடைமுறைப்படுத்தவில்லை’’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வி்ல் நேற்று நடந்தது.

இந்த வழக்கில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணிஷங்கர், ‘‘ஆட்டோ கட்ட ணத்தை முறைப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக எல்காட் நிறுவனம் மூலமாக ஆட்டோக்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தும் பணி 4 மாதங்களில் நிறைவடையும். இதற்காக ஏற்கெனவே டெண்டர் விடப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் ஆட்டோ ஓட்டுநர்கள் குறித்து எஸ்எம்எஸ் மூலமாக புகார் அளிக்க மென்பொருள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது’’ என்றார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கள், “சென்னையில் உள்ள ஆட்டோக்களில் ஜிபிஆர்எஸ் கருவிகள் 4 மாதங்களில் பொருத்தப் படும் எனவும், அதன்பிறகு மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள ஆட்டோக்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அந்தக் காலக்கெடு வுக்குள் சென்னையில் ஜிபிஆர்எஸ் கருவிகளை பொருத்த வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் டிசம்பர் 6-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

SCROLL FOR NEXT