தமிழகம்

பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி சைக்கிளில் ரோந்து

செய்திப்பிரிவு

புதுச்சேரி காவல்துறையில் ரோந் துப் பணியில் ஈடுபடும் போலீ சாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சைக்கிள்கள் வழங்கப்பட் டன. சைக்கிள் ரோந்தை தீவிரப் படுத்தவும், பாதுகாப்பு மற்றும் துாய்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, போலீஸாருடன் நேற்று சைக்கிளில் ரோந்து சென்றார்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகை யில் தொடங்கிய இந்த சைக்கிள் ரோந்து, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கடற்கரைச் சாலை காந்தி சிலை அருகில் நிறைவு பெற்றது. இதில் டிஜிபி சுனில்குமார் கவுதம், சீனியர் எஸ்பி ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முடிவில் கிரண்பேடி கூறும் போது, “புதுச்சேரியை சுத்தமாக வும், பாதுகாப்பாகவும் வைத்தி ருக்க வலியுறுத்தி சைக்கிள் ரோந்து மேற்கொண்டிருக்கிறோம். மக்கள் சாலைகளில் குப்பையை வீசக்கூடாது. வீடுகளிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து துப்புரவு ஊழி யர்களிடம் வழங்க வேண்டும். தூய்மை, பாதுகாப்பு இந்த இரண் டும் புதுச்சேரியின் லோகோவாக இருக்க வேண்டும். இவை இருந் தால்தான் புதுச்சேரி வளர்ச்சி பெறும்” என்றார்.

இதன் பின்னர், சர்வதேச கடற் கரை தூய்மை தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள 33 கிலோ மீட்டர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி புதுச் சேரி காந்தி சிலை அருகில் நடைபெற்றது. இதில் கிரண்பேடி கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தார். இதில் என்எஸ்எஸ் மாணவ, மாணவி கள், சுயஉதவிக் குழு பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT