தமிழகம்

நித்யானந்தா சீடரை விரட்டியடித்த பொதுமக்கள்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை பவழக்குன்று மலையில் உள்ள பாறைக்கு மீண்டும் பூஜை செய்ய வந்த நித்தியானந்தா சீடரை, கற்களை வீசி பொதுமக்கள் விரட்டினர்.

திருவண்ணாமலையில் பவழக்குன்று மலையில் நித்தி யானந்தா ஞானம் பெற்றதாகக் கூறி, அவர் அமர்ந்த பாறைக்கு அவரது சீடர்கள் பூஜை நடத்தினர். கோட்டாட்சியர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு மலையில் அமைக்கப்பட்டிருந்த குடில் அகற்றப்பட்டது.

இந்நிலையில், பவழக்குன்றில் பாறைக்கு நேற்று அதி காலை முதல் மீண்டும் பூஜைகள் செய்யப்படுவதாக தகவல் வெளியானது. அப்பகுதிக்கு சென்ற பொதுமக்கள், நித்யானந்தாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி னர். அந்த சமயத்தில் பூஜை செய்வ தற்காக சீடர் ஒருவர் வந்துள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள், அவர் மீது கற்களை வீசி விரட்டினர்.

SCROLL FOR NEXT