தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாக ஆளுநர் தெரிவித்ததற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக தலைமையும் கவர்னர் மீது அதிருப்தி அடைந்துள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘தி இந்து’விடம் பேசிய மேலிடத் தலைவர் ஒருவர், “குஜராத், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றப் பட்டாலும் காங்கிரஸ் பிரமுகரான தமிழக ஆளுநர் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால், தற்போது ஆளும்கட்சிக்கு ஆதரவாக பேசுவது ஆச்சர்யம் அளிக்கிறது.
இதுகுறித்து கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவர் ஆளுநர் மாளிகை வட்டாரங்களில் பேசியிருக்கிறார். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து பேசப்பட்டது. அப்போது சர்ச்சைக்குரிய சினிமா விவகாரம் குறித்தும் ஆலோசிக் கப்பட்டிருக்கிறது” என்றார்