தமிழகம்

போலி பட்டா வழங்கிய வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு உயர் நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

இழப்பீடு கோரிய வழக்கில் உண்மைக்கு மாறாக பதில் மனு தாக்கல் செய்ததாக மதுரை ஆட்சியர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை பொதுநலன் வழக்கு கள் மையத்தின் கன்வீனர் கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் பணிபுரிந்தபோது, திருப்பரங்குன்றம் நிலையூரில் வீடற்ற ஏழைகள் 17 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட் டது. அந்த இடத்தில் வீடு கட்ட முயன்றபோது சிலர் தடுத்தனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சி யர் சகாயத்திடம் புகார் அளித் தோம். வருவாய் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 2001-ம் ஆண்டில் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கிய பட்டாதான் செல்லுபடி யாகும். 2012-ம் ஆண்டில் வழங் கப்பட்ட பட்டா செல்லாது என் றும் தெரியவந்தது. இதனால் 17 பேருக்கும் வேறு இடத்தில் பட்டா வழங்க உ.சகாயம் மற்றும் வருவாய் அதிகாரிகளிடம் மனு அளித்தோம். இதுவரை பட்டா வழங்கவில்லை. முறைகேட்டில் ஈடுபட்ட வருவாய் அதிகாரிகள் மீது உயர் நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் 17 பேரும் இழப்பீடு கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்து நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் மாவட்ட ஆட்சி யர் மற்றும் ஆட்சியரின் நேர் முக உதவியாளர் ஆகியோர் உண்மைக்கு மாறாக பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் ஆட்சியர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.வேணு கோபால் முன் நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் நீதிமன்றம் ஏற்கெனவே அனுப்பிய நோட்டீஸ் சகாயத் துக்கு இதுவரை சென்றடைய வில்லை எனத் தெரிவிக்கப்பட் டது.

இதையடுத்து சகாயத்துக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பவும், தலைமைச் செயலர், வருவாய் செயலர், மாவட்ட ஆட்சியர், ஆட்சியரின் நேர்முக உதவியா ளர், வட்டாட்சியர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை ஜூலை 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

          
SCROLL FOR NEXT