தமிழகம்

போதையில் விபத்து: கார் பந்தய வீரர் ஜாமீன் கோரி மனு

செய்திப்பிரிவு

சென்னை தி.நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜய் ஆனந்த். இவரது மகன் விகாஷ்(20). கார் பந்தய வீரர். இவரும் இவரது நண்பர் சரண்குமாரும் மது போதையில் கார் ஓட்டி ராதா கிருஷ்ணன் சாலையில் 10 ஆட்டோக்கள் மீது மோதினார். இதில் ஆட்டோக்கள் பலத்த சேத மடைந்தன.

ஆட்டோவுக்குள் தூங்கிக் கொண்டிருந்த டிரைவர் ஆறுமுகம் பலியானார். மற்ற ஆட்டோ டிரைவர்கள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.

போலீஸாரால் கைது செய்யப்பட்ட விகாஷ், சரண்குமார் ஆகிய இருவரும் தங்க ளுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச் சந்திரன், இதுகுறித்து போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 23-ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.

ஏற்கெனவே கடந்த சில மாதங் களுக்கு முன்பு குடிபோதையில் காரை ஓட்டி முனுசாமி என்ற கூலித்தொழிலாளி இறக்க காரண மாக இருந்ததாக ஐஸ்வர்யா என்ற இளம்பெண் கைது செய்யப் பட்டு ஜாமீனில் உள்ளார்.

இதேபோல் நடிகர் அருண் விஜய் குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT