நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் வெற்றிக் கூட்டணி அமையும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்தார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "இலங்கை ராணுவம் மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.
தமிழக, புதுச்சேரி மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜனவரியில் இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளது. இதில் சுமூக முடிவு கிடைக்கும் என நம்புகிறோம். மத்திய அரசின் முடிவுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
கடந்த 2004, 2009-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் வெற்றி கூட்டணி அமைந்தது. இக்கூட்டணி அதிக இடங்களைப் பிடித்து ஆட்சியமைத்தது. அதேபோல் வரும் 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் தலைமையில் வெற்றி கூட்டணி அமையும்" என்றார் வாசன்.