கோவையில் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை நீதிமன்றத்தில் மேலும் 2 பேர் சரணடைந்தனர். கொலையில் தொடர்புடையதாக சந்தேகத்தின்பேரில் 3 பேரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை, உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பாரூக் (31). திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிர்வாகியான இவர், தீவிர கடவுள் மறுப்பாளராக இருந் தார். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி இரவு உக்கடம் அருகே மர்மக் கும்பலால் கொலை செய் யப்பட்டார். உக்கடம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொலையாளிகளை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக போத்தனூர் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த எம்.அன்ஷர்த் (31) என்பவர் கடந்த 17-ம் தேதி கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சம்பவ இடத்தில் கிடைத்த பாரூக்கின் செல்போன் அழைப்புப் பதிவுகள், சிசிடிவி பதிவுகள் மூலம் விசாரித்தனர். இதில், 6 பேர் கொண்ட கும்பல் பாரூக்கை கொலை செய்ததை போலீஸார் உறுதி செய்து அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், கோவை நீதித் துறை நடுவர் நீதிமன்றம் எண் 5-ல் தெற்கு உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (28), கரும்புக்கடையைச் சேர்ந்த சம்சுதீன் (31) ஆகியோர் இந்த கொலை வழக்கு தொடர்பாக நேற்று சரணடைந்தனர். ஏப்.3-ம் தேதி வரை இருவரையும் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கோவை மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.
இக்கொலையில் சரணடைந்த இருவருக்கும் தொடர்பில்லை எனவும் அவர்களது வீட்டிலும் போலீஸார் விசாரணை என்ற பெயரில் தொந்தரவு கொடுப்பதால் தலைமறைவாக இருந்து நீதிமன் றத்தில் சரணடைந்துள்ளனர் எனவும் அவர்களது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கொலை வழக்கில் அடுத்தடுத்து மூவர் சரணடைந்துள்ளதையடுத்து, அவர்களை காவலில் எடுத்து விசா ரிக்க போலீஸார் முடிவு செய்துள் ளனர். முதல்கட்டமாக அன் ஷர்த்தை காவலில் எடுக்க, நேற்று நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.
போலீஸார் கூறும்போது, ‘தனிப் படை போலீஸாரின் விசாரணையில் மேலும் சிலருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் சந்தேகத் தின் பேரில் அக்ரம்ஜிந்தா, அப்துல் முனாஃப், ஜாபர் என்ற மூன்று பேரிடம் போலீஸார் விசாரிக்கின் றனர்.
நீதிமன்றத்தில் சரணடைந்த வர்களை காவலில் எடுத்து விசாரிக்க விரைவில் நீதிமன்றம் அனுமதி வழங்கும். அதன் பிறகு கொலைக்கான காரணம் தெரியவரும். இந்த கொலையில் தொடர்புடைய கும்பல் வேலூரை மையமாகக் கொண்டு சமீபத்தில் இயங்கியிருப்பதாகவும் கூறப் படுகிறது’ என்றனர்