தமிழகம்

15-வது பேரவையின் முதல் கூட்டத்தொடர்: தமிழக சட்டப்பேரவை 16-ல் கூடுகிறது - ஆளுநர் ரோசய்யா உரையாற்றுகிறார்

செய்திப்பிரிவு

தேர்தலுக்குப் பிறகு தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர், 16-ம் தேதி ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்குகிறது.

தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த மே16-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் 134 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக அதிமுக ஆட்சி அமைத்துள்ளது. திமுக 89 இடங்களில் வெற்றி பெற்று, வலுவான எதிர்க்கட்சி யாக உள்ளது. திமுக கூட்டணி கட்சி களான காங்கிரஸுக்கு 8 இடங்களும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடமும் கிடைத்தன.

கடந்த மே 23-ம் தேதி முதல் வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற் றுக் கொண்டனர். அன்று மாலையே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட து. புதிதாக நியமிக்கப்பட்ட 4 அமைச்சர்கள், 25-ம் தேதி ஆளுநர் மாளிகையில் பத வி யேற்றனர்.

அதைத் தொடர்ந்து 15- வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த 25-ம் தேதி நடந்தது. அதில் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 230 பேரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர் . அவர்களுக்கு தற்காலிக பேரவைத் தலைவர் செ.செம்மலை பதவிப்பிரமா ணம் செய்து வைத்தார். அப்போது பேரவை முன்னவராக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசு தலைமை கொறடாவாக அரியலூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

பேரவைத் தலைவர் தேர்வு

சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த 3-ம் தேதி சட்டப்பேரவை கூடியது. பேரவைத் தலைவராக பி.தனபால், துணைத் தலைவராக பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்தல் முடிந்து புதிதாக அமையும் சட்டப்பேரவையின் அலுவல்கள் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாகும். அதன்படி, 15-வது சட்டப் பே ரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. அன்று பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்றுகிறார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய அரசியலமைப்பு பிரிவு 176 (1)-ன்படி ஜூன் 16-ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சட்டப்பேரவை மண்டபத் தில் ஆளுநர் உரை நிகழ்த்துவார்’ என தெரிவித்துள்ளார். இதில் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பேரவையில் உரையாற்ற வரும் ஆளுநரை பேரவைத் தலைவரும் செயலாளரும் வரவேற்று அழைத்து வருவர். பேரவைத் தலைவரின் இருக்கை யில் அமர்ந்து, ஆளுநர் தனது ஆங்கில உரையை வாசிப்பார். பின்னர், அவரது உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் வாசிப்பார். அத்துடன் பேரவை ஒத்திவைக்கப்படும். அன்றே பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூடி, எத்தனை நாட்களுக்கு கூட்டத்தை நடத்துவது என்பதை முடிவு செய்யும். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மா னத்தின் மீது 3 நாட்கள் விவாதம் நடக்கும் என்று தெரிகிறது.

ஆளுநர் உரையின்போது சட்டப் பே ரவை உறுப்பினர்களுக்கான இருக்கை ஒதுக்கீடுகள் செய்து முடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 5 ஆண்டுகளுக் குப் பிறகு கடந்த 25-ம் தேதி சட்டப் பேரவைக்கு வந்த கருணாநிதி, திருவாரூர் தொகுதி எம்எல் ஏவாக பதவியேற்றார். அவர் சக்கர நாற்காலியில் வந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வசதியாக இருக்கை வசதி செய்துதர வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இருக்கை வசதி செய்யப் ப டுமா, பேரவை நிகழ்வுகளில் கருணா நிதி பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

89 எம்எல்ஏக்கள் இருப்ப தால் சட்டப்பேரவை வளா கத்தில் அதற்கேற்ப விசால மான அறை ஒதுக்க வேண்டும் என பேரவைச் செயலாளரிடம் திமுக கொறடா சக்கரபாணி மனு அளித்துள்ளார். எனவே, திமுகவுக்கு வசதியான அறை ஒதுக்கப்படும் எனக் கூறப்ப டுகிறது.

ஸ்டாலினுக்கு அங்கீகாரம்

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக அக்கட் சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே, ஸ்டாலினை சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவராக பேரவைத் தலைவர் பி.தனபால் அங்கீகரித்துள்ளார். இதற்கான அறிவிப்பை பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் நேற்று வெளியிட்டார். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 98 எம்எல்ஏக்களுடன் வலுவான எதிர்க்கட்சி இருப்பதால் பேரவைக் கூட்டத்தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT