தமிழகம்

மீனவர் பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சியினர் பங்கேற்றக் கூடாது- மீனவர் சங்கம் கோரிக்கை

செய்திப்பிரிவு

வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில், அரசியல் கட்சி சாராதவர்கள் இடம்பெற வேண்டுமென்று, தமிழ்நாடு கடலோர விசைப்படகு மீனவர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அச்சங்கத்தின் தலைவர் எஸ்.வேணுகோபால் என்ற மாறன் புதன் கிழமை வெளியிட்ட அறிக்கை வருமாறு: தமிழகம் மற்றும் இலங்கை மீனவர் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை வரும் 27ம் தேதி நடைபெறுவ தாக தமிழக அரசு அறிவித் துள்ளது. இக்கூட்டத்தின் மூலம் தமிழக மீனவர்களின் அவலநிலை நீக்கப்பட்டு அவர்களுக்கு வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கை, மீனவர்களுக்கு இருக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்கும் தமிழக மீனவப் பிரதிநிதிகள் அனைவரும் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்பட்ட தமிழக பகுதியைச் சேர்ந்தவர்களா கவும், எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராத வர்களாகவும் இருக்க வேண்டும்.

SCROLL FOR NEXT