தமிழகத்தில் நேற்று 7 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிக மாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 9 நகரங்களில் வெயில் சதம் அடித்திருந்தது. அதிகபட்ச வெப்பநிலையாக சேலம் மற்றும் கரூர் பரமத்தி வேலூரில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியிருந்தது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறும்போது, “தென் தமிழகம் மற்றும் கன்னியாகுமரியை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப் படும்.
நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி, 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தி வேலூரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் (40 டிகிரி சென்டிகிரேட்), சேலத்தில் 103.28 டிகிரி, வேலூரில் 102.74 டிகிரி, திருச்சியில் 102.56 டிகிரி, மதுரை மற்றும் பாளையங்கோட்டையில் தலா 102.2 டிகிரி, தருமபுரியில் 100.58 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.