தமிழகம்

கச்சத்தீவை முதல்வர் ஜெயலலிதா மீட்பார்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

செய்திப்பிரிவு

கச்சதீவை முதல்வர் ஜெயலலிதா மீட்பார் என்று திமுக பொருளா ளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

காயிதே மில்லத்தின் 121-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த மு.க.ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது:

இஸ்லாமியர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக் காக பாடுபட்டவர் காயிதே மில்லத். திமுக இஸ்லாமியர்களுக்காக பல் வேறு போராட்டங்களை முன் னெடுத்துள்ளது.

இஸ்லாமியர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத் துக்காக திமுகவின் பணிகள் தொடரும்.

கச்சத்தீவை மீட்போம் என்று அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, கச்சத் தீவை முதல்வர் ஜெயலலிதா மீட்பார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT