தமிழகம்

அண்ணா நூலகத்தில் இன்று மாணவர்களுடன் இறையன்பு ஐஏஎஸ் கலந்துரையாடல்

செய்திப்பிரிவு

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாசகர்கள், குழந்தை கள் நலனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரு கின்றன. குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் ஞாயிறுதோறும் காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடக்கின்றன. அதுபோல, பல்வேறு துறை களைச் சேர்ந்த பிரபல ஆளுமை களுடன் கலந்துரையாடும் ‘பொன் மாலைப்பொழுது’ நிகழ்ச்சி சனிதோறும் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடக்கிறது.

மேலும், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் ஆலோசனை வழங்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஞாயிறுதோறும் காலை 11 மணிக்கு நடக்கிறது. 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 11 மணிக்கு நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தமிழக அரசின் பொருளியல், புள்ளியியல் துறை முதன்மைச் செயலர் வெ.இறையன்பு ஐஏஎஸ், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளார். இதில் கலந்துகொள்ள அனுமதி இலவசம்.

நிகழ்ச்சிகள் பற்றி மேலும் விவரங்களை அண்ணா நூற்றாண்டு நூலக இணைய தளத்தில் (www.annacentenary library.org) தெரிந்துகொள்ள லாம்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT