நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி அமையும் என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில், திமுக தலைவர் கருணாநிதியிடம் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு, பதிலளித்த அவர்: "திமுகவின் மனநிலை என்ன என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது" என்றார்.
அதே போல் கங்கிரசுடன் கூட்டணி நீடிக்குமா என்ற கேளிவிக்கு, பொதுவாகக் கூட்டணி பேச்சுவார்த்தைகளே இன்னும் தொடங்கவில்லை. எனவே யாரோடு கூட்டணி என்பது பற்றிய பேச்சே எழவில்லை என தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்றத்தில் 2ஜி ஒதுக்கீடு குறித்த ஜெபிசி அறிக்கை தாக்கல் செய்திருப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்ட போது, "நாடாளுமன்றத்தில் அந்த அறிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.அது தான் என்னுடைய கருத்தும்" என தெரிவித்தார்.
திமுக பொதுக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ன்றத் தேர்தல் குறித்து மட்டுமே ஆலோசிக்கப்படுமா என நிருபர் ஒருவர் கேட்க, நிலைமைக்கு ஏற்ப ஆலோசனை நடத்தப்படும் என்றார். அண்ணா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தின் மீது தனக்கு நம்பிக்கையும் ஆதங்கமும் இருப்பதாக தெரிவித்தார்.