தமிழகம்

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்

செய்திப்பிரிவு

பழம்பெரும் எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான ராஜம் கிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது (89).

உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரது உயிர் திங்கள்கிழமை இரவு பிரிந்தது.

உத்தர காண்டம், குறிஞ்சித்தேன், வளைக்கரம், கரிப்பு மணிகள், வேருக்கு நீர், மலர்கள்,முள்ளும் மலர்ந்தது, பாதையில் பதிந்த அடிகள், அலைவாய் கரையிலே, மண்ணகத்துப் பூந்துளிகள், சத்திய வேள்வி போன்ற அவரது படைப்புகள் இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கின்றன. 80-க்கும் மேற்பட்ட புதினங்களை அவர் எழுதியுள்ளார்.

அவரது 'வேருக்கு நீர் புனிதம்', சாகித்ய அகாடமி விருதை அவருக்குப் பெற்றுத்தந்தது என்பது குறிப்பிடத்தகக்து.

SCROLL FOR NEXT