2011 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர்
வென்றவர்: ஏ. சவுந்தரராஜன் (மா. கம்யூ)
பெற்ற வாக்குகள்: 84668
வெற்றி வாய்ப்பை இழந்தவர்: என்.ஆர். தனபாலன் (திமுக)
பெற்ற வாக்குகள்: 67245
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஏ. சௌந்தர்ராஜன் பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். சிறுபான்மையினர், உடலுழைப்புத் தொழிலாளர்கள், நடுத்தர வகுப்பினர் எனப் பலரும் வாழ்ந்து வரும் தொகுதி இது.
தரமான பள்ளி கல்லூரிகள், சீரான மின் விநியோகம், ரேஷன் விநியோகம், அரசு மருத்துவ வசதிகள், போக்குவரத்து கட்டமைப்பு முதலானவை நன்றாக இருப்பதாக பெரம்பூர் மக்கள் தெரிவித்துள்ளனர். சட்டம் ஒழுங்கு மேலும் முறையாக செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பை வெளியிட்டிருக்கும் இத்தொகுதியினர், கழிவுநீர் மேலாண்மையில் இன்னும் அக்கறை வேண்டும் என தெரிவித்துள்ளனர்.