காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் அப்பளம் தயாரிக்கும் தொழிலை நம்பி சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இந்த தொழிலாளர்கள் அனைவரும் அயல் பணி முறையிலேயே, கம்பெனி சட்ட வரம்புக்குள் வராத வகையில் வேலை செய்து வருகின் றனர். இதனால் இவர்கள் அங்கீகரிக்கப்படாத தொழிலாளர் களாக, அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் தொழிலாளர் நலதிட்டங்கள் எதுவும் கிடைக்காதவர்களாக உள்ளனர்.
பறிக்கப்படும் சலுகைகள்
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட அப்பளத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பெரிய அப்பளத் தயாரிப்பு நிறுவனங்கள், இத்தொழிலை, தொழிலாளர் மற்றும் கம்பெனி சட்டத்தின் கீழ் வராமல் இருக்கும் வகையில் மோசடியாக, திட்ட மிட்டு அவுட்சோர்சிங் என்ற பெயரில், குடிசைத் தொழில் போன்று, அந்தந்த ஊர்களில், முகவர்கள் மூலமாக கிளைகளை அமைத்து செய்து வருகின்றன.
சம்மந்தப்பட்ட முகவர்கள், வீடுகளை வாடகைக்கு எடுத்து, பெரிய நிறுவனங்களிடம் உளுந்து மாவு உள்ளிட்ட மூலப்பொருட் களைப் பெற்று அப்பளம் தயா ரித்து அந்நிறுவனங்களுக்கு அனுப்புகின்றனர். இவ்வாறு செய்வதன்மூலம், முகவர் நடத்துவதை நிறுவனமாக கருத முடியாது. அதனால் எங்களை தொழிலாளர்களாக அரசு ஏற்பதில்லை.
இதன் விளைவாக வருங்கால வைப்பு நிதி, மருத்துவ வசதி உள்ளிட்டவை கிடைப்பதில்லை. இவ்வாறு செய்யப்படும் தொழில், கம்பெனி சட்டத்தின் கீழ் வரா ததால், பணி செய்யும் இடத் தில் எந்த விதிமுறைகளும் கடை பிடிக்கப்படுவதில்லை. தொழிலா ளர் துறையிலும் அப்பள நிறு வனங்கள் குறித்து எந்த விவரமும் இருப்பதில்லை.
ஆஸ்துமாவால் பாதிப்பு
அப்பள தயாரிப்பு வேலை செய்யும் இடங்களில் கழிவறை, குடிநீர் வசதிகள் இல்லை. இதனால் இத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் கடும் அவதிக்கு உள் ளாகிறார்கள். உளுந்து மாவை கையாள்வதால் காற்றில் கலக் கும் மாவை சுவாசித்து, பல தொழிலாளர்கள் ஆஸ்துமா, ஒவ் வாமை, சுவாசக் கோளாறு நோய் களுக்கு ஆளாகின்றனர். இதை தடுப்பதற்கு எந்தவித பாதுகாப்பு கவசங்களையும் முகவர்கள் வழங்குவதில்லை. ஆண்டுக்கு 180 நாள்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கும். வேலை செய்தால் மட்டுமே கூலியும் கிடைக்கும். நேர நிர்வாகம் அறவே இல்லை. காலை முதல் மாலை வரை வேலை செய்ய வேண்டியிருக்கும்.
அங்கீகாரம்
இந்த கொடுமைகளில் இருந்து விடுதலை பெற, பீடித் தொழி லாளர்கள், வீட்டில் இருந்தபடியே வேலை செய்துக்கொண்டு, தொழி லாளர் சலுகைகளை பெறுவதைப் போல அப்பளத் தொழிலாளர் களை அங்கீகரித்து அப்பள தயாரிப்பு தொழிலை கம்பெனி சட்டத்தின் கீழ் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.