தமிழகம்

பேசும் படம்: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மணக்கோலத்தில் கலந்துகொண்ட தம்பதி!

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் அதி தீவிரமடைந்துள்ளது.

இளைஞர்கள், மாணவர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தோடு, விவசாய, லாரி, வணிகர் சங்கங்களும் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளன. வெள்ளிக்கிழமை ஆட்டோ, வேன், கால் டாக்சி ஓடாது என தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருமணத்தை முடித்த கையோடு புதுமணத் தம்பதியினர், மணக்கோலத்திலேயே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

மாட்டின் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக் கொண்டு மணமக்கள் நிற்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT