தமிழகம்

அவருடைய பாணியிலே சொல்ல வேண்டுமானால் மகிழ்ச்சி: ரஜினி பாராட்டுக்கு ஸ்டாலின் பதில்

செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், "அவருடைய பாணியிலே சொல்ல வேண்டும் என்றால் மகிழ்ச்சி" எனக் கூறினார்.

முன்னதாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை சென்னையில் ரசிகர்களுடனான கடைசி நாள் சந்திப்பில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "மு.க.ஸ்டாலின் என்னுடைய நெருங்கிய நண்பர். நல்ல திறமையான நிர்வாகி" என்று பாராட்டியிருந்தார்.

இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், "அவருடைய பாணியிலே, மொழியிலே நான் சொல்ல வேண்டுமென்று சொன்னால், மகிழ்ச்சி" என்றார்.

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை குறித்த கேள்விக்கு, "வருமான வரித்துறை ரெய்டுகள் முறையாக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் நடந்தால் உள்ளபடியே நாங்கள் அதை வரவேற்கிறோம். ஆனால், திட்டமிட்டு அரசியல் நோக்கத்தோடு ஒரு கட்சியை உடைப்பதற்கு, பிறகு உடைந்த கட்சியை இணைப்பதற்கு பயன்படுத்தினால் அதை நாங்கள் ஏற்க முடியாது" என்றார்.

SCROLL FOR NEXT