காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடை பெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணிகளை, மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக இணைச் செயலாளர் ஸ்ரீமதி அப்ரஜிதா சாரங்கி தலைமையில் மத்தியக் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் புஞ்சை அரசன்தாங்கலில் ரூ.8.30 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை இக் குழுவினர் பார் வையிட்டனர். குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் பொம்மைகள், வரை படங்களைக் கொண்டு அங்கன்வாடி பணியாளர்கள் கற்பிப்பதை கேட்ட றிந்தனர்.
மல்பெரி செடி வளர்ப்பு
களக்காட்டூரில் ரூ.3.50 லட்சத்தில் பட்டுப் புழுவுக்கான மல்பெரி செடி வளர்ப்பு, ரூ.1.64 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள பண்ணைக்குட்டையின் செயல்பாடுகள், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் கரிகிலியில் நீர்வடிப்பகுதி மேலாண்மைப் பணிகள், வெள்ளைப்புதூர்-வேடந்தாங்கல் சாலையில் ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் நடப்பட்டுள்ள சாலையோர மரங்கள், ரூ.21.86 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பசுங்குடில் நாற்றங்கால், வெள் ளைப்புதூர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தயாரிக் கப்படும் மண்புழு உரம், வேடந்தாங்கல் ஊராட்சியில் ரூ.8.90 லட்சத்தில் தூர்வாரப்பட்டுள்ள வரத்துக்கால்வாய், சித்தாதூரில் ரூ.15.45 லட்சத்தில் சீரமைக்கப் பட்டுள்ள குளக்கரை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மத்திய அரசின் இயக்குநர் காயா பிரசாத், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் கே.பாஸ்கரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலர் சாந்தா, மாவட்ட ஆட்சியர் கஜ லட்சுமி உள்ளிட்டோர் அப்போது உடன் இருந்தனர்.