தமிழகம்

டெல்டா மாவட்ட விவசாயிகள் ஜூலை 27-ல் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டக் குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்ற து.

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடகம் மாதந் தோறும் தமிழகத்துக்குத் தர வேண்டிய காவிரி நீரை உடன டியாக பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களில் வரும் 27-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்து வது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துக் கடன்க ளையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். டெல்டா மாவட்டங்களில் தேவைப்படும் இடங்களில் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களை திறக்க வேண்டும். தேங்காய் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், எண்ணெய் பொருட்கள் இறக்கு மதியைக் கட்டுப்படுத்தி, கொப் பரைக் கொள்முதலை எளிமைப் படுத்த வேண்டும் என வலியுறுத் தப்பட்டது.

SCROLL FOR NEXT