சென்னையை சேர்ந்தவர் துலுக் காணம். இவரது மகள் தமிழரசி. கடந்த 1983-ல் பிறந்த இவர், கடந்த 2003-ல் இறந்தார். இறப்புச் சான்று பெறுவதற்காக, அவரது 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றி தழ்களை விஏஓ ராமச்சந்திரனிடம் துலுக்காணம் கொடுத்துள்ளார். இவற்றை மோசடியாகப் பயன்படுத் திய விஏஓ ராமச்சந்திரன், பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த தனது மகள் அர்ச்சனாவை, தமிழரசி என ஆள்மாறாட்டம் செய்து எஸ்.சி. ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிக்கவைத்தார். ‘தமிழரசி’ என்ற பெயரிலேயே மருத்துவம் படித்து, டாக்டரான அர்ச்சனாவுக்கு கடந்த 2013-ல் திருமணமானது.
பாஸ்போர்ட்டால் அம்பலம்
இந்த சூழலில், அர்ச்சனாவின் பாஸ்போர்ட்டை அவரது மாமனார் எதேச்சையாகப் பார்த்தார். அதில் அவரது பெயர் ‘அர்ச்சனா என்ற தமிழரசி’ என்றும் ‘தந்தை பெயர் துலுக்காணம்’ என்றும் இருப்பதைப் பார்த்து சந்தேகம் அடைந்து இதுபற்றி அர்ச்சனாவிடம் விசாரித் தார். இதையடுத்து, அர்ச்சனா செய்த ஆள்மாறாட்டம் அம்பலமானது.
விவாகரத்து, இடைநீக்கம்
இது குடும்பத் தகராறாக மாறி யது. அர்ச்சனாவின் கணவர் விவா கரத்து கோரி தாம்பரம் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். இதற் கிடையில், ஆள்மாறாட்ட மோசடி யில் ஈடுபட்ட டாக்டர் அர்ச்சனாவை மருத்துவக் கல்வி இயக்குநரகம் இடைநீக்கம் செய்தது. மோசடி தொடர்பாக டாக்டர் அர்ச்சனா, அவரது தந்தை விஏஓ ராமச்சந்திரன் மீது கூடுவாஞ்சேரி போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
‘அப்பாதான் மோசடி செய்தார்’
இதைத் தொடர்ந்து, முன்ஜா மீன் கேட்டு சென்னை உயர் நீதிமன் றத்தில் அர்ச்சனா மனு தாக்கல் செய்தார். ‘‘இந்த மோசடி தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. அப்போது நான் மைனர். என் தந்தை விஏஓ ராமச்சந்திரன்தான் எல்லா மோசடிகளையும் செய்தார். அவரை கைது செய்வதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. எனக்கு முன்ஜாமீன் தரவேண்டும்’’ என்று அவர் தெரிவித்திருந்தார்.
விரைந்து விசாரணை
மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
இறந்த தமிழரசியின் பெயரை யும், சான்றிதழ்களையும் போலி யாக பயன்படுத்தி அவரது முகமூடி யாக அர்ச்சனா வாழ்ந்து வருகிறார். பிளஸ் 2-வில் தோல்வியடைந்த அர்ச்சனா, அந்த சான்றிதழ்கள் மூலம்தான் இப்போது டாக்டராக தொழில் செய்தும் வருகிறார். இது போன்ற ஆள்மாறாட்ட மோசடி களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இந்த மோசடியில் தனக்கு பங்கு இல்லை என மனுதாரர் கூறு வதை ஏற்கமுடியாது. ஏனெனில் அர்ச்சனா, தமிழரசி என 2 பெயர் களில் இவர் ஓட்டுநர் உரிமம் பெற் றுள்ளார். இந்த வழக்கை போலீஸார் போர்க்கால அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறிய நீதிபதி, அர்ச்சனாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.