கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டாட்சியர் அலுவலக சாலையில் வசித்து வந்தவர் சூரி (எ) சுரேஷ்(40). தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பில் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளராக இருந்தார். இவர் கடந்த 19-ம் தேதி இரவு, ஓசூர் நேரு நகரில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை வழக்கில் தொடர் புடையவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், இக்கொலை வழக்கு தொடர்பாக, நேற்று ஓசூர் சாந்தி நகரைச் சேர்ந்த கஜா என்கிற கஜேந்திரன்(29), ஓசூர் அருகே உள்ள மத்திகிரியைச் சேர்ந்த பாபு(26), ஓசூர் லட்சுமிதேவி தியேட் டர் பகுதியைச் சேர்ந்த சாஜித் பாஷா(25) ஆகிய 3 பேரும் போச் சம்பள்ளி குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் நீதித்துறை நடுவர் முன்னிலையில் சரண் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து 3 பேரை யும் வருகிற 6-ம் தேதி வரை நீதி மன்ற காவலில் வைக்க நீதித் துறை நடுவர் உத்தரவிட்டார். இதை யடுத்து 3 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஓசூர் நேரு நகரில் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசுவ இந்து பரிஷத் நிர்வாகி மகேஷ் மர்ம நபர்களால் கொலை செய் யப்பட்டார். இச்சம்பவத்தின்போது மகேஷுடன் இருந்த கஜாவுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாம் ராட் உள்ளிட்ட சிலர், தற்போது கொலை செய்யப்பட்ட சூரியுடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறப் படுகிறது. இவ்வாறான நிலையில் தற்போது சூரி கொலை தொடர்பாக கஜா சரண் அடைந்துள்ளார்.