யாரை ஆதரிப்பது என வாக்குப்பெட்டி வைத்து மக்கள் கருத்தை கேட்க நாகப்பட்டினம் தொகுதி மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜன நாயக கட்சி உள்ளது. தற்போது அதிமுகவில் உள்கட்சி பிரச்சினை நீடிப்பது வருத்தமளிக்கிறது. இப்பிரச்சினையில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்க முடிவு செய்துள்ளேன்.
இதற்காக, நாகப்பட்டினத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பி னர் அலுவலகத்தில் பிப். 13-ம் தேதி (இன்று) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பெட்டி வைக்கப்பட்டிருக்கும். இதில், பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.