தமிழகம்

தொழிலதிபர் கடத்தல் வழக்கில் பெண் உட்பட 3 பேர் கைது; ஓட்டுநரை பிடிக்க தனிப்படை

செய்திப்பிரிவு

திருச்செங்கோட்டைச் சேர்ந்த பெண் தொழிலதிபரை கடத்திய வழக்கில் பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலை மறைவான தொழிலதிபரின் கார் ஓட்டுநரை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலைக்காவலர் கோயில் பின்புறத்தைச் சேர்ந்தவர் ஷர்மிளா பானு (40). தனது கணவர் பஷீர் மறைவுக்குப் பிறகு பட்டறைமேடு பகுதியில் வாகனங்களுக்குத் தேவையான ஹைட்ராலிக்ஸ் தயார் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரை கடந்த 22-ம் தேதி அவரது கார் ஓட்டுர் அக்பர் அலி உட்பட 3 பேர் கடத்திச் சென்று ரூ.20 கோடி பணம் கேட்டு மிரட்டினர். பணம் கொடுக்க அவர் ஒப்புக்கொண்டதையடுத்து ஷர்மிளாபானு விடுவிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக திருச்செங் கோடு நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தினர். கடத்தலில் ஈடுபட்ட சேலம் சின்ன அம்மா பாளை யத்தைச் சேர்ந்த பாசில் (22), மனைவி யாஸ்மின் (22), இவரது தம்பி லியாகத் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மூவரும் அக்பர் அலியின் உறவினர்கள் எனவும், கடத்தப்பட்ட ஷர்மிளா பானுவை, யாஸ்மின் மாடி வீட்டில் வைத்து பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.

தவிர, யாஸ்மின் நர்ஸாக பணி புரிந்து வருவதும், அவர் ஷர்மிளா வுக்கு மயக்க ஊசி போட்டதும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 16 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இக்கடத்தலின் மூளையாக இருந்து செயல்பட்ட கார் ஓட்டுநர் அக்பர் அலி தலை மறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க திருச்செங்கோடு டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அக்பர் அலியை பிடிப்பதற் காக சேலம், தருமபுரி, கிருஷ்ண கிரி மாவட்டங்களில் தனிப்படையி னர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அக்பர் அலியின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிட மும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT