ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், ''ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் டாக்டர் எம்.மணிகண்டன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முதுகுளத்தூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.கருப்புசாமி, ஒன்றிய மகளிரணிச் செயலாளர் கே.ஹேமா, ஒன்றிய மீனவரணிச் செயலாளர் பி.முருகேசன், கமுதி ஒன்றியச் செயலாளர் ஏ.மீனாட்சிசுந்தரம், கடலாடி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் எம்.சத்தியமூர்த்தி, முதுகுளத்தூர் பேரூராட்சி செயலாளர் எம்.முருகன், கமுதி பேரூராட்சி செயலாளர் கே.பி.எம். இக்பால், துணைச் செயலாளர் ஏ.ஜெயச்சந்திரன், சாயல்குடி பேரூராட்சி செயலாளர் வி.சுப்பிரமணியன் ஆகியோர் அவரவர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட டாக்டர் எம்.மணிகண்டன் ஏற்கனவே வகித்து வரும் மருத்துவ அணி துணைச் செயலாளர் பதவியில் நீடிப்பார்.
புதிய பொறுப்பாளர்கள்
ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக எம்.ஏ.முனியசாமி, முதுகுளத்தூர் ஒன்றியச் செயலாளர் எம்.முருகன், கமுதி ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.காளிமுத்து, கடலாடி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் பி.சரவணன், கமுதி பேரூராட்சி செயலாளர் வி.கே.ஜி.முத்துராமலிங்கம், துணைச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், சாயல்குடி பேரூராட்சி செயலாளராக எஸ்.சரீபு ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
புதிய நிர்வாகிகளுக்கு அதிமுகவினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கடலாடி ஒன்றியக் குழுத் தலைவர் நீக்கம்
அதிமுகவின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் வி.மூக்கையா, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர 27-வது வார்டு செயலாளர் ஏ.பழனிவேல் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர். இவர்களுடன் அதிமுகவினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.