தமிழகம்

சேலத்தில் காஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் இன்று அதிகாலை காஸ் சிலிண்டர் வெடித்ததில், ஒரு பெண் உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஆட்டையாம்பட்டி மேட்டுக்கடை தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தான் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் ஆயிஷா (40), அவரது மகன் சித்திக் (18) மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தேவராஜ் (45) ஆகியோரும் பலியாகினர். தேவராஜ் உடலில் அதிக அளவில் தீக்காயங்கள் இருந்ததால் சிலிண்டர் விபத்தின் போது தேவராஜ் சமையலறையில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டிருப்பது தெரியாமல் அடுப்பை பற்ற வைக்க முயற்சித்த போது விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் மஹரபூஷணம், போலீஸ் எஸ்.பி. சக்திவேல் ஆகிடோர் பார்வையிட்டனர்.

SCROLL FOR NEXT