மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சமீபகால மாக அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்தேன். சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக சில கருத்துகளை தெரிவிக்கிறேன். தமிழகத்தில் இதற்கு முன்பு 3 முறை நம்பிக்கை வாக்கெடுப்புகள் நடத் தப்பட்டு உள்ளன. ரகசிய வாக் கெடுப்பு என்பது சட்டப்பேரவை யிலோ, நாடாளுமன்றத்திலோ கிடையாது.
ரகசிய வாக்கெடுப்பு என்ற திமுக வின் கோரிக்கை நியாயமற்றது. மார்கண்டேய கட்ஜூ போன்றவர்கள் கூட ரகசிய வாக்கெடுப்பு நடத்த சொல்வது ஆச்சரியம் அளிக்கிறது.
பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்த போது குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும் என்று சொன்ன ஸ்டாலின், தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவை உறுப்பினர் களுக்கு அவகாசம் கொடுக்க வேண் டும் என கேட்பது ஏன் என்றார்.