சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியதை வரவேற்று பெரம்பலூரில் தீபா பேரவையினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இனிப்பு வழங்கிக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த அதிமுகவினர், தீபா பேரவையினரை உருட்டுக் கட்டைகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தீபா பேரவையின் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிச்சை(52), செங்குணம் நல்லுசாமி(62), கவுல்பாளையம் சம்பத்(48), பெரம்பலூர் மணிசேகரன்(55) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதில், மண்டை உடைந்து பலத்த காயமடைந்த பிச்சை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.