தாம்பரம் நகராட்சியில் மொத்தம் 22 பூங்காக்கள் உள்ளன. தற்போது கூடுதலாக 4 இடங்களில் 2 கோடியே 14 லட்சத்தில் புதிய பூங்காங்காள் அமையவுள்ளன. 32-வது வார்டு ஹரிதா என்கிளேவ் , சி.டி.ஓ. காலனி ,கோன் கிருஷ்ணா நகர் , வார்டு 27 அருள் நகர், வார்டு 38 அமல் நகர் போன்ற இடங்களில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் பூங்கா அமைக்கும் பணி நடைபெறவுள்ளது.
பல்லாவரம் நகராட்சியில் தற் போது 25 பூங்காக்கள் மக்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலை யில், கூடுதலாக மூன்று இடங்களில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. 9-வது வார்டு, சித்ரா டவுன்ஷிப், 13-வது வார்டு சுபம் நகர், 17-வது வார்டு ஏ.ஜி.எஸ்., நகர் ஆகிய இடங்களில் பூங்காவுக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை யடுத்து, அம்ரூட் திட்டத்தின் மூலம் 2 கோடி ரூபாய் செலவில் 3 பூங்காக்களையும் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அங்கு நடைபாதை, சுற்றுச்சுவர், விளை யாட்டு உபகரணங்கள், நீரூற்று, பூச்செடி, புல்தரை ஆகிய வசதி களும் அமைக்கப்படவுள்ளன.
இதுகுறித்து நகராட்சி அதி காரி ஒருவர் கூறும்போது, ‘மத்திய அம்ரூட் திட்டத்தின் கீழ் அமைய வுள்ள பூங்காப் பணிகளுக்காக மத்திய அரசு 50 சதவீதமும் மாநில அரசு 20 சதவீதமும் நிதி வழங்குகிறது. மீதமுள்ள நிதியை நகராட்சி பொது நிதியில் இருந்து பெற்று, பூங்கா பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்றார்.