தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தமிழக, ஆந்திர மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தீபத் திருநாளான தீபாவளியைக் கொண்டாடும் தமிழக, ஆந்திர மக்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக, ஆந்திர மக்களுக்கும், நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தீபாவளித் திருநாள் அறியாமை எனும் பேரிருளை விரட்டட்டும், உன்னத சிந்தனைகளால் நமது உள்ளங்களை ஒளிரச் செய்யட்டும்.
நமது மனங்களில் அன்பு, இரக்கம் விளையச் செய்யட்டும். அதனால் அமைதியும், ஒற்றுமையும் நிலவட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.