தமிழகம்

நடிகரை கடத்தி நகை பறித்த வழக்கில் தொழிலாளி கைது

செய்திப்பிரிவு

சேலத்தில் நகைச்சுவை நடிகரை கடத்தி நகை, பணம், செல்போனை பறித்த வழக்கில் தொழிலாளி ஒருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான ஆட்டோ ஓட்டுநர்களை தேடி வருகின்றனர்.

சென்னை போரூரைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சேலம் வந்தபோது, அவரை ஆட்டோவில் சிலர் கடத்திச் சென்று தாக்கி ரூ.2,500, ஏடிஎம் கார்டு, அடையாள அட்டை, 2 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை பறித்தனர்.

இதுகுறித்து சேலம் சூரமங் கலம் போலீஸார் நடத்திய விசாரணையில், புதிய பேருந்து நிலையத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இருவர், கொட்டாச்சியை கடத்திச் சென்று பணம் பறித்தது தெரியவந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சேலம் சின்னம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி தீனதயாளன்(25) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவான ஆட்டோ ஓட்டு நர்கள் இருவரை தேடி வரு கின்றனர்.

SCROLL FOR NEXT