மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் பிரசவம் முதல் பிணவறை வரை லஞ்சம் தலைவிரித் தாடுவதாக புகார் எழுந்துள்ளது
மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனைக்கு நாளொன்றுக்கு சுமார் 9 ஆயிரம் வெளிநோயாளிகள், 2,600 உள்நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
தமிழகத்திலேயே நோயாளிகள் வருகையில் பெரிய மருத்துவமனை என்ற பெருமையும் இதற்கு உள்ளது. சமீப காலமாக லஞ்சத்துக்கும், சர்ச்சைகளுக்கும் இம்மருத்துவமனை பெயர்பெற்று வருகிறது.
சில நாட்களுக்கு முன் கணபதி என்பவர், தனது மகன் ராஜேந்திர பிரசாத்தை(18) ஆம்புலன்ஸ் மூலம் ஆபத்தான நிலையில் சிகிச்சைக் காக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு வந்துள்ளார். 300 ரூபாய் கொடுத்தால்தான் ஸ்டெரெச்சரை தள்ளுவேன் என அடம்பிடித்த ஊழியர், உள்நோயாளிகளுக்கான அனுமதிச் சீட்டை வாங்கி வந்தால் தான் சிகிச்சை அளிப்பேன் என அலட்சியம் காட்டிய மருத்துவர் உள்ளிட்டோரின் இரக்கமற்ற செயல் களால் அந்த இளைஞர் உயிரிழந் தார். இதுபோன்ற சர்ச்சைகள் இம்மருத்துமனைக்கு புதிதல்ல.
2002-ம் ஆண்டு வெடிகுண்டு வீசி தாக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் காட்டியதாக எழுந்த புகாரால் 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 2006-ம் ஆண்டு பார்வையிழந்த பெற்றோரின் குழந்தை கடத்தல் முதல் இதுவரை 8 குழந்தை கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. 2009-ம் ஆண்டு பிரசவ வார்டில் ஊழியர்களிடம் லஞ்ச பணம் பறிமுதல் உள்ளிட்ட சம்பவங்கள் அரசு ராஜாஜி மருத் துவமனையின், அனைத்து மட்டங் களிலும் தலைவிரித்தாடும் லஞ் சத்தை தோலுரித்துக் காட்டுகிறது.
லஞ்சம் வாங்கும் ஊழியர்க ளைக் கண்காணிக்கும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன் மருத்து வமனை வளாகத்தில் 20 கண் காணிப்புக் கேமராக்கள் பொருத்தப் பட்டன. ஆனாலும், நோயாளிக ளிடம் சிகிச்சைக்கு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக புகார்கள் வந்துகொண்டு இருக்கின்றன.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சுகாதாரச் செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் கூறும்போது, ‘‘அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தால், ரூ.1,000 பெண் குழந்தை என்றால் ரூ.500 ஊழியர்கள் சன்மானமாகப் பெறு வது எழுதப்படாத சட்டமாகவே இருக்கிறது. மருத்துவமனை சீருடை அணிந்துகொண்டு ஊழியர் கள் போல நோயாளிகளிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஒரு கும்பல் ஈடுபடுகிறது.
லஞ்சத்தை ஒழிப்பதில் தொடங்கி, தரமற்ற சிகிச்சை, போக்குவரத்து நெரிசல், திருட்டுச் சம்பவங்களை தடுப்பதில் மருத்து வமனை நிர்வாகம், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய வற்றின் ஒருங்கிணைந்த கண்கா ணிப்பு இல்லாத நிலை உள்ளது” என்றார்.
இதுகுறித்து மருத்துவமனை டீன் எம்ஆர்.வைரமுத்து ராஜு விடம் கேட்டபோது, “மருத்துவ மனை சிகிச்சையில், எந்தத் தவ றும் நடக்கவில்லை. வெளியாள் ஒருவர் லஞ்சம் கேட்டது தொடர் பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.