பள்ளி மாணவர்களுக்கிடையேயான போதை விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு குறித்த கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டன.
இந்த போட்டிகளுக்கு போதை எதிர்ப்பு, மறுவாழ்வு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.
பிராட்வேயில் உள்ள பாரதி மகளிர் கலைக்கல்லூரி வளாகத் தில் நடந்த இந்த போட்டிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற னர். இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கான பரிசளிப்பு விழா சென்னை ராய புரத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ் ச்சியில் இயக்குநர் தங்கர் பச்சான், இயக்குநர் பாரதி கிருஷ் ணக்குமார், போதை எதிர்ப்பு வாழ்க்கை பாதுகாப்பு விழிப் புணர்வு இயக்கத்தின் தலைவர் திருவேட்டை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.