திருநெல்வேலி அருகே உள்ள தருவை அம்மன்கோயில் தெரு வைச் சேர்ந்தவர் ராஜசேகர்(29). கட்டிடத் தொழிலாளர். இவரது மனைவி மேகலா(26). இவர் களுக்கு முத்துச்செல்வி(8), காவியா(6), ஆர்த்தி(3) ஆகிய 3 பெண் குழந்தைகள் இருந்தனர்.
ராஜசேகருக்கு குடிப் பழக்கம் இருந்தது. தினமும் போதை யில், மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு வந்த ராஜசேகர், வழக்கம்போல் மேகலாவிடம் தகராறு செய்தார்.
அப்போது மேகலாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதனால் பதறிய மேகலா, அங்கு இருந்து தப்பித்து பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
வீட்டில் 3 பிள்ளைகளும் தூங்கிக்கொண்டு இருந்தனர். ஆத்திரத்தில் இருந்த ராஜசேகர் குழந்தைகளை எழுப்பி, தலை முடிக்கு பூசும் சாயத்தை குளிர் பானத்தில் கலந்து வலுக்கட்டாய மாக ஊட்டினார். சிறிது நேரத்தில் குழந்தைகள் 3 பேரும் உயிரிழந்தனர். போதை மயக்கத்தில் ராஜசேகர், அதி காலையில் எழுந்தபோது குழந் தைகள் இறந்து கிடப்பதைப் பார்த்து பதறினார்.
பின்னர் உடலில் மண்ணெண் ணெய் ஊற்றி தீவைத்துக்கொண் டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜசேகர் உயிரிழந்தார். குழந் தைகள் 3 பேரும் இறந்து கிடந்ததைக் கண்டு மேகலா கதறி துடித்தார்.