தமிழகம்

வன சீருடைப் பணி நேர்முகத் தேர்வு தகுதி பட்டியல் வெளியீடு

செய்திப்பிரிவு

தமிழ்நாடு வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் வனவர் மற்றும் கள உதவியாளர் பணிக்கு, எழுத்துத் தேர்வு, உடல் தகுதி மற்றும் நடைத் தேர்வு ஏற்கெனவே நடத்தப்பட்டது.

அதில் தேர்வு பெய்யப்பட்டு, இறுதி கட்டத் தேர்வான நேர்முகத் தேர் வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் பட்டியல் வனத்துறை யின் >http://www.forests.tn.nic.in/என்ற இணையதளத்தில் வெளியிடப்பட் டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள இடம், தேதி மற்றும் நேரத்தில் விண்ணப்பதாரர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT