தமிழகம்

பக்ருதீனுக்கு ரஜினி படம்னா உயிர்…

செய்திப்பிரிவு

பக்ருதீன் அலி அகமது என்ற போலீஸ் பக்ருதீன் சின்ன வயதில் தீவிர ரஜினி ரசிகர். ரஜினி படம் பார்ப்பதற்காக இரும்புப் பட்டறையில் வேலைபார்த்துச் சம்பாதித்த ஒரு ரூபாய், ரெண்டு ரூபாயை வைத்துக் கொண்டு டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பார். சிந்தாமணி தியேட்டரில், பாயும் புலி படம் ஓடியபோது ஆண்கள் டிக்கெட் விலை அதிகம் (90 பைசா, ரூ.1.10 பைசா). ஆனால் பெண்கள் டிக்கெட் 30 பைசா, 60 பைசாதான். இதனால், பெண்கள் டிக்கெட்டை 30 பைசாவுக்கு வாங்கிவிட்டு, மீதிக்காசுக்கு முட்டை போண்டா சாப்பிடலாம் என்று கணக்கு போடுவார்.

அதற்காக பெண்களிடம் டிக்கெட் எடுத்துத்தரச் சொல்லி கெஞ்சுவார். சில முறை பெண்கள் காசை வாங்கிவிட்டு, டிக்கெட் எடுத்துக் கொடுக்க மறந்துவிடுவார்கள். அவர்கள் வருவார்கள் வருவார்கள் என்று வாசலிலேயே ஏமாற்றத்தோடு காத்திருப்பார். இப்படி பலமுறை நடந்திருக்கிறது. அதெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும்தான். பிறகு, அவர் வயதொத்த பையன்களிடம் சேர்ந்து பாதை மாறிவிட்டார்.

SCROLL FOR NEXT