சென்னை திரிசூலத்தைச் சேர்ந்த கலியன் என்ற ராமச்சந்திரன்(33), சங்கரன்கோவில் அருகே உள்ள கண்டிகைப்பேரி கிராமத்தில் வேல்முருகன் என்பவரது வீட்டில் தங்கி இருந்தார்.
இவர் நேற்று சங்கரன்கோவிலில் இருந்து கண்டிகைப்பேரிக்கு பைக்கில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிரே காரில் வந்த கும்பல் ராமச்சந்திரனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர்.
ராமச்சந்திரன் மீது 4 கொலை வழக்குகள் மற்றும் பல்வேறு கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலையாளி யார், எதற்காக இந்த கொலை நடைபெற்றது என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.