தமிழகம்

காவிரி கரையோரத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் மாணவர்கள்

செய்திப்பிரிவு

குமாரபாளையம் காவிரி கரையோரங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை கல்லூரி மாணவர்கள் குழுவாக இணைந்து அகற்றி வருவது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

குமாரபாளையம் காவிரி நகரில் காவிரி கரையோரங்களில் ஏராளமான சீமைக் கருவேல மரங்கள் உள்ளன. கருவேல மரங்கள் நிலத்தடி நீரை பாதிக்கச் செய்யும் என்பதால், அவற்றை அந்தந்த மாவட்ட நிர்வாகம் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், குமார பாளையம் காவிரிக் கரையோரங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை கல்லூரி மாணவர்கள் குழுவாக இணைந்து அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் புவனேஷ் மற்றும் பிரபாகரன் ஆகியோர் இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதைக்கண்ட தன்னார் வலர்களும் மாணவர்களுடன் இணைந்து சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர். தொடர்ந்து 3-வது வாரமாக நேற்று சீமைக்கருவேல மரங்களை மாணவர்கள் வெட்டி சுத்தம் செய்து வருவது, அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT