ஸ்ரீராமானுஜர் ஆயிரமாவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் ‘ராமானுஜ தரிசனம்’ என்ற பெயரில் ரத யாத்திரையை ஆந்திர மாநில ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரத யாத்திரை தொடக்க நிகழ்ச்சி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் முன்பு நேற்று நடந்தது. யாத்திரையை ஆந்திர மாநில ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘‘வாழ்க்கையில் மாதா, பிதா, குரு, தெய்வத்தை எப்படி மனதில் கொண்டு நடக்க வேண்டும் என்பதை ராமானுஜர் தனது செயல்கள் மூலம் வாழ்ந்து காட்டினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதி, மத, இனத்தின் தடைகளை தகர்த்தெறிந்தார். அவரது வாழ்க்கையே நமக்கு பாடம். அதனால் ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை நமது குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்’’ என்றார்.
விழாவில், மன்னார்குடி ஸ்ரீமத் செண்பகமன்னார் ராமா னுஜ ஜீயர், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமத் அப்பன் பரகால எம்பார் ஜீயர் சுவாமி, மேல்கோட்டை ஸ்ரீமத் யதுகிரி யதிராஜ நாரா யண ராமானுஜ ஜீயர் சுவாமி, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் எம்பி ஆகி யோர் பேசினர். ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை விளக் கும் சிடி, டிவிடி, புத்தகங்கள் உள்ளிட்டவை வெளியிடப் பட்டன.
இந்த ரத யாத்திரை தமிழகத் தின் அனைத்து மாவட்டங் களில் உள்ள நகரங்களுக்கு செல்வதுடன் ஆந்திரா, கர் நாடகா மாநிலங்களுக்கும் செல் லும். அப்போது ராமானுஜரைப் பற்றிய சொற்பொழிவுகள் நடத்தப்படுவதுடன், பிரசுரங் களும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.